நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
ஶ்ரீநகர்: இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா டிவி விவாதமமொன்றில் அவதூறாகப் பேசினார். இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரான், ஈராக் உள்ளிட்ட 14 நாடுகள் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்திய அரசு இதற்குப் பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கேட்கவும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தின.

இது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசு வெவ்வேறு விளக்கங்கள் அளித்த போதும் பிரச்சனை ஓயவில்லை. பாஜகவில் இருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதனால் நுபுர் சர்மாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தன.
இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுமையின் போது நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் பதற்றத்தை இந்த போராட்டம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் உத்தரவிட்டது புதிய சர்ச்சையானது. இது தொடர்பாக கபூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே நுபுர் சர்மா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications