அரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!
அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ: அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர்சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, காஷ்மீர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த வரிசையில் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார் உத்தரப்பிரதேச எம்எல்ஏ சுரேந்திர சிங். பல சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான சுரேந்திர சிங் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாலியல் தொழிலாளிகள் பெட்டர்
உத்தரப்பிரதேச மாநிலம் பளியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏவான சுரேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என்றார்.

மேடைகளிலும் நடனமாடுவார்கள்
பாலியல் தொழிலாளிகள் தாங்கள் பெறும் பணத்திற்கான வேலையை சரியாக செய்வார்கள். மேடைகளிலும் நடனமாடுவார்கள்.

உத்தரவாதம் இல்லை
ஆனால் அரசு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டாலும் வேலையை செய்ய மாட்டார்கள்.
செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுத்தாலும் அரசாங்க அதிகாரிகள் வேலையை முடிப்பார்களா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறினார்.

செருப்பால் அடியுங்கள்
மேலும் அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் கேட்டால் அவர்களை அடித்து உதைத்து தக்க பாடம் புகட்டுங்கள். அதன்பிறகும் வேலை நடக்காவிட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். இவ்வாறு சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

பணம் சம்பாதிக்கிறார்
கடந்த மாதம், உத்தரப்பிரதேச அமைச்சர் சுகேல்தேவுடன் எஸ்பிஎஸ்பி கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை ஒப்பிட்டு ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஒரு பாலியல் தொழிலாளி என்றார். அவரது குடும்ப உறுப்பினர்களை அரசியலில் ஈடுபடுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

மமதாவை சூர்ப்பனகை என்றார்
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரும் இந்த சுரேந்திர சிங்தான். பாஜகவினர் தொடர் சர்ச்சைப் பேச்சுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications