Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாக்டவுனால் கஷ்டப்படுகிறோம்.. கஸ்டமரும் இல்லை.. ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.. விபச்சார பெண்கள் கண்ணீர்

லாக்டவுன் பிரச்சனையால் வருமானம் இல்லை என விபச்சார பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: "லாக்டவுன் காரணமாக தொழில் முடங்கி போய் விட்டது... கஸ்டமர்களும் வருவதில்லை... வாழ்வது சிரமமாக உள்ளது" என்று ஆந்திர மாநில விபச்சார பெண்கள் தங்களுக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.

Recommended Video

    கஸ்டமரும் இல்லை.. ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.. விபச்சார பெண்கள் கண்ணீர்

    உண்மையிலேயே விபச்சாரபெண்களின் நிலைதான் மிகவும் மோசமானது. இவர்கள் தினசரி தங்களது உடலை வருத்தித்தான் சம்பாதித்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது கொரோனா பரவல் கொடூரத்தால் லாக்டவுன் அமலாகியுள்ளது. இதனால் இவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

    யாரும் வருவதில்லை என்பதாலும், யாரும் வருவதற்கு அஞ்சுகின்றனர் என்பதாலும் இவர்களால் சம்பாதிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பலர் தவிக்கின்றனர்.

    பாலியல் தொழில்

    பாலியல் தொழில்

    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த "விமுக்தி" என்ற அமைப்பு இப்பெண்களின் நலனுக்காக களம் இறங்கியுள்ளது. அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒரு விரிவான கோரிக்கையை இவர்கள் விபச்சாரப் பெண்கள் சார்பில் வைத்துள்ளனர். அதில், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும். நிவாரண நிதி வழங்க வேண்டும்.

    வறுமை

    வறுமை

    அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும். லாக்டவுன் காரணமாக இவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் வாடுகின்றனர். உலகம் முழுவதும் இதுபோன்ற நிலையில்தான் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எத்தனையோ கொடுமைகளைச் சந்தித்துள்ள இப்பெண்கள் தற்போது ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் நிலை மிகவும் அவலமானது.

    தவிப்பு

    தவிப்பு

    இவர்கள் குடியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் இவர்களைக் காலி செய்ய சொல்லி மிரட்டுகின்றனர். வருமானமும் இல்லாத நிலையில் இவர்கள் எங்கு போக முடியும்.. குழந்தைகளுடன் உள்ள பலரும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்... பொதுமக்களுக்குக் கிடைக்கும் பலன்கள் கூட இப்பெண்களுக்கு கிடைப்பதில்லை. மற்றவர்களும் கூட இவர்களுக்கு முன்வருவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    எய்ட்ஸ்

    எய்ட்ஸ்

    இந்த பெண்களில் பலருக்கு எய்ட்ஸ் உள்ளது. அவர்களுக்குரிய சிகிச்சையை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பலரின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. மேலும் இவர்கள் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தவர்கள் இப்போது பணம் கேட்டு நெருக்குகின்றனர் என்று முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

    விரக்தி

    விரக்தி

    இவர்களுக்கு மாவட்ட அளவில் கமிட்டிகள் அமைத்து நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் விமுக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.. இவர்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதுமே பாலியல் தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.. ஆண்கள் குடும்பத்துடன் இருப்பதால் யாரும் இவர்களிடம் போவதில்லை, தவிர நோய் பயம் காரணமாகவும் யாரும் வெளியே வருவதில்லை என்பதால் இவர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+