விவசாய கடன் தள்ளுபடி குறித்து மோடி உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு திட்டவட்டம்
டெல்லி: விவசாய கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மோடி உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்புவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

24 வது நாட்களை தாண்டியுள்ள போராட்டத்தின்போது, பாம்பு கறி சாப்பிடுவது, எலிக்கறி சாப்பிடுவது என பல்வேறு வகையான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது, அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். எனினும், விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் மீது லேசான தடியடி நடத்திய போலீசார், விவசாயி அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகளை கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் நிபந்தனையுடன் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடைபெறும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் தங்களை கைது செய்து அழைத்து சென்றபோது தாக்கியதாக குற்றம் சாட்டினார். மேலும், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மோடி உறுதி அளிக்கும் வரை ஜந்தர் மந்தரில் அறவழிப் போராட்டம் தொடரும் எனத் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications