திருட்டு வழக்கில் சிறை சென்ற தாய்.. பெற்ற சிறுமிகளை பலமுறை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. ஷாக்!
லூதியானா: பஞ்சாப்பில் தனது இரு மகள்களை பலாத்காரம் செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவருக்கு மனைவியும் 10 மற்றும் 15 வயதுகளில் இரு மகள்களும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். இந்த நிலையில் இவரது மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் லூதியானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் குறித்து அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் கன்னா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் நான் அந்த இளைஞர் வசிக்கும் குடியிருப்பில் வசித்து வருகிறேன்.

மொட்டை மாடியில் கண்ட அதிர்ச்சி
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நான் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த இளைஞர் அவரது 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து அடுத்த நாளே இரவு 8 மணிக்கு மீண்டும் அந்த சிறுமியை அந்த இளைஞர் பலாத்காரம் செய்தார்.

பலாத்காரம்
அதாவது பெற்ற மகளையே அவரது தந்தை பலாத்காரம் செய்ததால் நான் திடுக்கிட்டு போனேன். இதையடுத்து அந்த இளைஞர் இல்லாத போது அந்த சிறுமியை அழைத்து விசாரித்தேன். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அனைத்து கொடுமைகளையும் என்னிடம் சொன்னார்.

தாய் சிறையில்
அந்த இளைஞரின் மனைவி அதாவது இந்த குழந்தைகளின் தாய் சிறையில் இருப்பதால் இந்த சிறுமிகளை தினந்தோறும் அவர் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் அந்த சிறுமி சொன்னார். அது போல் தனது 10 வயது தங்கையையும் அவ்வாறே பலாத்காரம் செய்து வருவதாகவும் அந்த சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அருவறுப்பு
தாய் இல்லாத நேரங்களில் தங்கள் மகள்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டிய தந்தையே இப்படி அரக்கத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்வது அருவறுக்கத்தக்க விஷயம். தயவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள். இரு சிறுமிகளையும் அவரது தம்பியையும் காப்பகத்தில் சேர்த்து விடுமாறு அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

தந்தை கைது
இதையடுத்து அந்த இரு சிறுமிகளையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனது தந்தையின் கொடூர செயலை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்துத்தான் அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். பெற்ற மகள்களையே தந்தை ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications