காங்., பாஜகவுக்கு குட்பை... தந்தைக் கட்சியில் இணைகிறார் என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி!
ஹைதராபாத்: முதலில் காங்கிரஸிலும், பி்ன்னர் பாஜகவிலும் இணைந்து செயல்பட்ட மறைந்த என்டிஆரின் மகள் புரந்தேஸ்வரி, தனது தந்தை ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சியில் இணைவது குறித்து யோசித்து வருகிறாராம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய இணை அமைச்சராக சில காலம் இருந்தார் புரந்தேஸ்வரி.
பின்னர் லோக்சபா தேர்தலில் இவருக்கு காங்கிரஸ் சீட் மறுத்ததால் பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.

நாயுடுவின் மைத்துனி
சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் தங்கைதான் புரந்தேஸ்வரி. நாயுடு மீதான அதிருப்தியில்தான் இவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

பபத்லா - விசாகப்பட்டனம்
முதலில் பபத்லா லோக்சபா தொகுதியிலிருந்தும், பின்னர் விசாகப்பட்டனம் தொகுதியிலிருந்தும் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாஜகவுக்குத் தாவல்
கடந்த லோக்சபா தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி சீட் மறுத்து விட்டது. இதனால் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார்.

தெலுங்கு தேசம் திரும்புகிறார்
இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்குதேசம் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளாராம்.

அமெரிக்காவிலிருந்து தகவல்
தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள புரந்தேஸ்வரி இதுகுறித்துக் கூறுகையில், எங்கள் குடும்பத்தின் நலம் விரும்பிகள் அனைவரும், நான், தெலுங்கு தேசம் கட்சியில் சேர வேண்டும் என, விரும்புகின்றனர். எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.

சரியான நேரத்தில் முடிவு
ஆனால், இந்த விவகாரத்தில், அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. சரியான நேரம் வரும்போது, சரியான முடிவை எடுப்பேன் என்று புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.

அண்ணன்கள் தெலுங்கு தேசத்தில்
புரந்தேஸ்வரியின் அண்ணன்களான என்.டி.ஆர். ஹரிகிருஷ்ணா, என்.ஆடி.ஆர். பாலகிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே தெலுங்குதேசத்தில்தான் உள்ளனர். அந்த வரிசையில் புரந்தேஸ்வரியும் இணைவார் என்று தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications