தீரத்சிங் ராவத் ராஜினாமா- உத்தரகாண்ட் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி தேர்வு!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர்சிங் தாமி ஒருமனதாக தேர்வானார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக பதவி வகித்தவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்த அதிருப்தி பா.ஜ.கவில் உட்கட்சி பூசலாகவும் வெடித்தது. இதனையடுத்து 4 மாதங்களுக்கு முன்னர் திரிவேந்திரசிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் தீரத்சிங் ராவத், புதிய முதல்வராக்கப்பட்டார்.

முதல்வராக நீடிப்பதில் சிக்கல்
லோக்சபா எம்.பி.யாக இருக்கும் தீரத்சிங் வரும் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது 2 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால் இந்த 2 தொகுதிகளுக்கான தேர்தலை உடனே நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

கொரோனாவால் இடைத்தேர்தல் இல்லை
கொரோனா பரவல் காரணமாக உடனடியாக இடைத்தேர்தல் சாத்தியமில்லை என்றது தேர்தல் ஆணையம். இதனால் தீரத்சிங் முதல்வராக நீடிப்பதில் சட்ட சிக்கல் எழுந்தது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீரத்சிங் சரியாக மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் கடுமையாக முன்வைக்கப்பட்டன.

தீரத்சிங் ராவத் ராஜினாமா
இதனால் வேறுவழியே இல்லாமல் தீரத்சிங் ராவத் நேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் முன்னிலையில் இந்த கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

புஷ்கர்சிங் தாமி தேர்வு
இதில் புஷ்கர்சிங் தாமி, உத்தரகாண்ட் பா.ஜ.க. சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் 3-வது முதல்வர் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications