பெங்களூருக்குள் நுழைய தனியார் பஸ்களுக்கு 3 நாள் தடை.. தமிழக பயணிகள் அவதி
பெங்களூர்: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டையொட்டி, பெங்களூர் நகர மையப்பகுதிக்குள் தனியார் பஸ்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வெளிமாநில பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொலை தூரங்களில் இறங்கி வேறு வாகனங்கள் மூலம், வீடு திரும்பும் நிலை பயணிகளுடையதாக உள்ளது.
கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, நாளை முதல் 5ம் தேதிவரை மொத்தம் 3 நாட்கள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகின் பல நாட்டு தொழிலதிபர்களும் பெங்களூர் வருகிறார்கள்.

பெங்களூர் வரும் தொழிலதிபர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்கவும், நகரில் காற்று மாசடைவதை குறைத்து, நகரம் குறித்த ஒரு நல்ல காட்சியை ஏற்படுத்தவும், பெங்களூருக்குள் தனியார் பஸ்களை அனுமதிக்க கூடாது என்ற முடிவுக்கு, போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து வந்துள்ளன.
முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டும், தனியார் பஸ்களை மத்திய பெங்களூர் பஸ் நிலையமான மெஜஸ்டிக் மற்றும் அதன் 20 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள் விட மாட்டோம் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.
இதனால் மெஜஸ்டிக், கலாசிபாளையம், சாந்திநகர், மடிவாளா போன்ற பகுதிகளில் இருந்து பஸ்கள் புறப்படாது, வராது என்று அறிவிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இத்தடை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று முதலே தனியார் பஸ்கள் சிட்டிக்குள் வருவது தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
விஆர்எல் டிராவல்ஸ் நிறுவன நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறும்போது, மும்பையில் இருந்து பெங்களூர் வந்த எங்கள் பஸ், பீன்யா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பீன்யா சாட்டிலைட் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் நிலை வந்தது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக கூறி, ஏற்கனவே உள்ள தனியார் பஸ் முதலீட்டாளர்களுக்கு அரசு தொல்லை தருகிறது என்றார்.
தமிழகத்தில் இருந்துவரும் தனியார் பஸ்களும், நகரின் மையப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படி நுழைய வேண்டுமானால், காலை 6 மணிக்கு முன்பாகவே நகருக்குள் பஸ்கள் வந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் பெங்களூருக்கு வரும் தனியார் பஸ்கள், நகருக்குள் செல்வதில்லை. எனவே, பயணிகள் தாங்கள் இறக்கிவிடப்படும் பகுதியில் இருந்து ஆட்டோ, டாக்சி மற்றும் நகர பேருந்துகள் மூலமாக, தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications