ராவணன் போல செயல்படுவோர் அழிந்து போவார்கள்.. ராதே மா "சாபம்"!
மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா, தான் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், யாரையும் நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ராதே மா.
கவர்ச்சி சாமியார் என கருதப்படும் ராதே மா குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன. அவர் மீது சமீபத்தில் மும்பை போலீஸார் வரதட்சணைக் கொடுமை வழக்கைப் பதிவு செய்தனர்.
தனது பக்தர்களை அவர் நெருக்கமாக கட்டிப்பிடிப்பதாகவும், ஆபாசமாக டான்ஸ் ஆடுவதாகவும் கூட சர்ச்சைகள் உள்ளன. இந்த நிலையில்தான் கவர்ச்சிகரமான உடையில் அவர் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை மேலும் கூட்டின.
இந்த நிலையில் இதுகுறித்து வாய் திறந்துள்ளார் ராதே மா. இதுகுறித்து அவர் கூறியதாவது:

யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை
நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள்.

உண்மையே வெல்லும்
வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது. அதுவே வெல்லும்.

கடவுள் பார்த்துக் கொள்வார்
சமூக சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வோரை கடவுள் பார்த்துக் கொள்வார். அவர்களுக்கு அவர் வெற்றியையும் தேடித் தருவார்.

ஏன் கட்டிப்பிடிக்கிறேன்
நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப்பிடித்து அவர்களுக்குத் திருப்பித் தருகிறேன் என்றார் அவர்.

விரைவில் விசாரணை
இதற்கிடையே, வரதட்சணைக் கொடுமை வழக்கில் விரைவில் ராதே மாவிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு விட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications