ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் டவுசரில் இருந்து பேண்ட்டுக்கு மாற, என் மனைவிதான் காரணம்: லாலு கேலி
பாட்னா: என் மனைவி ராப்ரி தேவி கேலி செய்ததால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது சீருடையை மாற்றிவிட்டது என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 90 வருடங்களாக, ஒரே மாதிரியான சீருடையை பயன்படுத்தி வருகிறது. வெள்ளைக்கார போலீசார் அணியும் காக்கி அரைக்கால் சட்டையை போன்ற ஒரு கால் சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிவது ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காக்கி அரைக்கால் சட்டைக்கு பதிலாக இனிமேல் பிரவுன் வண்ண முழு பேண்ட் அணிவது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் குறித்து லாலு தனக்கே உரித்தான கிண்டல் பாணியில் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ் தனது அரைக்கால் சட்டையில் இருந்து பேண்ட்டுக்கு அப்கிரேட் ஆவதற்கு எனது மனைவி ராப்ரி தேவியின் கிண்டல் பேச்சுதான் காரணம். எப்படித்தான் வயதானவர்களும் கால் சட்டை போட்டுக்கொண்டு பொது இடங்களில் சுற்றுகிறார்களோ தெரியவில்லை.. என ராப்ரி கேலி செய்திருந்தார்.
இதன்பிறகுதான் ஆர்.எஸ்.எஸ் தனது சீருடையை மாற்றியுள்ளது. இப்போது அவர்கள் ஆட்சி நடப்பதால் அப்கிரேட் செய்துள்ளனர். ஆட்சி மாறியதும், பழையபடி கால் சட்டை கலாசாரத்திற்கே அவர்களை அனுப்பி வைத்துவிடலாம். இவ்வாறு லாலு தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications