உணவு பாதுகாப்பு மசோதா விவகாரத்தில் ராகுல் மக்களை முட்டாளாக்குகிறார்: மோடி

Subscribe to Oneindia Tamil

ஜகதல்பூர்: உணவு பாதுகாப்பு மசோதாவை சத்தீஸ்கர் அரசுதான் முதலில் அறிமுகப்படுத்தியது..ஆனால் காங்கிரஸ் அறிமுகப்படுத்துவதாக மக்களை முட்டாளாக்கி வருகிறார் ராகுல் காந்தி என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசிய மோடி, உணவு பாதுகாப்பு மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்ததாக இளவரசர் பேசி வருகிறார். அவர் இப்படி பேசி மக்களை முட்டாளாக்கி வருகிறார்.

Rahul fooling people by taking credit for Food bill: Modi

உண்மையில் பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர் மாநில அரசுதான் உணவு பாதுகாப்பு மசோதாவை முதலில் கொண்டு வந்தது. சத்தீஸ்கர் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது நின்றுபோய்விடக் கூடாது. இப்படியான ஒரு மாநில அரசுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலை புதைகுழிக்கு அனுப்பும் நேரம் இது. உங்களது வாக்குகளை சாதி அல்லது வேறு எதன் பெயராலோ நீங்கள் செலுத்த வேண்டாம். வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+