ராகுல் காந்திக்கு கூட்டம் வரும்.. ஓட்டு விழாது.. யாத்திரை வேஸ்ட்.. அஸ்ஸாம் கூட்டணி கட்சி தாக்கு!
குவஹாத்தி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் இடங்களில் கூட்டம் அலைமோதும்; ஆனால் ராகுல் காந்திக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஓட்டுகள்தான் கிடைக்காது என அஸ்ஸாம் மாநில கூட்டணி கட்சியான ஏ.ஐ.யு.டி.எஃப் (AIUDF) தலைவர் பத்ருதீன் அஜ்மல் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஏ.ஐ.யு.டி.எஃப் இணைந்திருந்தது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் காலத்தில் "இந்தியா" கூட்டணி கேட்பாரற்று கிடந்தது. இதனால் ஏ.ஐ.யு.டி.எஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கடும் கோபத்தை கொட்டியிருந்தார்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஜனவரி 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை பேருந்து யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அஸ்ஸாமில் ஏ.ஐ.யு.டி.எஃப் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. ஏ.ஐ.யு.டி.எஃப் ஏற்கனவே 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை விமர்சித்துள்ளார் ஏ.ஐ.யு.டி.எஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல். இது தொடர்பாக பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது: நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி. ஆகையால் ராகுல் காந்தி எங்கே போனாலும் கூட்டம் அலைமோதவே செய்யும். மக்கள் அவரை ஒரு ஹீரோ போலவே பார்க்கின்றனர். ஆனால் ராகுல் காந்திக்காக கூடுகிற அத்தனை கூட்டமும் வாக்குகளாக மாறாது. இந்த கூட்டம் காங்கிரஸுக்கு வாக்குகளாகவும் மாறாது. ஆகையால் பாதயாத்திரை போவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதும் இல்லை. இவ்வாறு பத்ருதீன் அஜ்மல் கூறினார்.
ராகுல் காந்தியின் யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கி நாகாலாந்து அஸ்ஸாம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications