அடுத்த அஸ்திரம்.... ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு எதிராக வரிந்து கட்டும் ராகுல்!!
டெல்லி: மத்திய அரசின் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராகுல் இப்போது ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு எதிராக வரிந்து கட்டுகிறார். மத்திய அரசின் ரியல் எஸ்டேட் மசோதா கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமானது என்று ராகுல் சாடியுள்ளார்.

அரசியலுக்கு 56 லீவ் போட்டுவிட்டு போன ராகுல் காந்தி திரும்பி வந்தது முதல் அதிரடியாகத்தான் செயல்பட்டு வருகிறார்... நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிர்ப்பு, விவசாயிகள் பிரச்சனை என தீவிரம் காட்டிய ராகுல் இப்போது ரியல் எஸ்டேட் மசோதாவை எதிர்க்கிறார்..
Congress VP Rahul Gandhi addressing the Press, post his interaction with Home Buyers today #RGWithHomeBuyers pic.twitter.com/IDXMflmkQ0
— INC India (@INCIndia) May 2, 2015 டெல்லியில் இன்று ராகுலை வீடு வாங்குவோர்கள் குழுவாக சந்தித்து ரியல் எஸ்டேட் மசோதாவானது கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக முறையிட்டனர்.
இதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம் ராகுல், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் ரியல் எஸ்டேட் மசோதா கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமானது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வீடு வாங்குவோர் சார்பில் ஏற்படுத்திய பாதுகாப்பு விஷயங்களை இந்த மசோதா நீர்த்துப் போகச் செய்துள்ளது.
எனவே இந்த ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளை வாங்குவோரை இந்த ரியல் எஸ்டேட் மசோதா மிகக் கடுமையாகவே பாதிக்கும்,
இவ்வாறு ராகுல் கூறினார்.
மசோதாவும் சிக்கலும்
மத்திய அரசின் ரியல் எஸ்டேட் மசோதாவின் முக்கிய அம்சங்கள்
- ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். அனைத்து வீடு மற்றும் வர்த்தக கட்டிட திட்டங்கள் இங்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போது கட்டிடத்தின் லே,அவுட் பிளான், கட்டிட அனுமதி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். கான்ட்ராக்டர், கட்டிடக்கலை நிபுணர், இன்ஜினியர், ஆகியோரது பெயர்களை தெரிவிக்க வேண்டும். அதன்பின்பே விளம்பரம் செய்ய முடியும். இதன் மூலம் தரமான வீடுகளை மக்கள் வாங்க முடியும்.
- அபார்ட்மென்ட்டின் நுழைவுப் பகுதி உட்பட பொதுவான இடங்களை (சூப்பர் ஏரியா) வாடிக்கையாளர்களிடம் பில்டர்கள் விற்க தடை செய்யப்படும். வீடு அமைந்துள்ள இடத் தின் அளவை (கார்பட் ஏரியா) மட்டுமே விளம்பரம் செய்ய முடியும்.
- பில்டர்கள்,வாடிக்கையாளர் இடையேயான பிரச்னை மற்றும் இழப்பீடு ஆகியவை ரியல் எஸ்டேட் ஆணையம் மூலம் தீர்க்கப்படும்.
- குறித்த காலத்தில் கட்டிடங்களை கட்டி முடிக்க, வாடிக்கையாளரிடம் பெறும் பணத்தில் 50 சதவீதத்தை, 15 நாட்களுக்குள் வங்கியின் தனி கணக்கில் பில்டர்கள் செலுத்த வேண்டும்.
- பில்டர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை அவ்வப்போது பகுதி, பகுதியாக ரொக்கமாக பெற இந்த மசோதா தடை விதிக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த முறை கொண்டுவரப்படுகிறது.
- இந்த திருத்தங்களில் பெரும்பாலானவை பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில்தான் இந்த அம்சங்கள் இருப்பதாகவும் முந்தைய காங்கிரஸ் அரசின் மசோதாவை நீர்த்து போகவும் ரியல் எஸ்டேட் முதலாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே மோடி அரசு செயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications