குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து- ராகுல்

குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம், புதிதாக அமையவுள்ள அரசுகளுக்கு வாழ்த்து என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலிலும், ஹிமாச்சல பிரதேச தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இரு மாநில தேர்தல்களிலும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

Rahul Gandhi congratulates the new governments to be formed in Gujarat and HP

என் மீது அன்பு வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். எதிராளியின் கோபத்தை காங்கிரஸ் கட்சியினர் நாகரீகத்தால் எதிர்கொண்டனர்.

நாகரீகமும் அஞ்சாமையும் காங்கிரஸின் பெரும் பலம் என்பதை நிலை நாட்டிவிட்டனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என்னை பெருமைப்படுத்திவிட்டனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+