ஊழல், ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சனை.. விவாதிக்க ரெடியா? மோடிக்கு ராகுல் சவால்
போபால்: ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்குகிற பிரதமர் மோடி ஊழல், ஜிஎஸ்டி மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டங்கள் அக்னி வெயிலை விட உக்கிரமானவையாக இருக்கிறது. ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை மிக காட்டமாக முன்வைக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்.டி.டி.வி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் ராகுல் கூறியிருப்பதாவது:

மோடிக்கு சவால்
ஒரு நாளைக்கு 3 மணிநேரம்தான் பிரதமர் உறங்குகிறார் என்கிறார்கள். நாட்டில் நிலவும் ஊழல், ஜிஎஸ்டி விவகாரம், பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து என்னுடன் விவாதிக்க மோடி தயாரா?

தத்துவ யுத்தம்
நான் பிரதமர் மோடியை மிகவும் மரியாதையுடனேயே சந்திக்கிறேன். ஆனால் என் மீது ஒருவித வெறுப்பை வெளிப்படுத்துகிறார் மோடி. இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளுக்கும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கும் இடையேயான யுத்தமே தற்போது நடைபெறுகிறது.

மக்கள் அஞ்சுகின்றனர்
தேசத்தின் அரசியல் சாசனத்துக்கு தத்துவார்த்தங்களின் பெயரால் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை மீறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடியே அறிவிக்கிறார். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி இந்த நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது.

பொய்யை பரப்பும் மோடி
நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் குறித்து தொடர்ந்து மோடி விமர்சித்து வருகிறார். எனக்கு உண்மைகள் என்ன என்பது தெரியும். என்னுடைய பாட்டி இந்திராவின் நேர்மையை பற்றி எனக்கு தெரியும். அத்தனையும் பொய்களைத்தான் பிரதமர் மோடி பரப்புகிறார்.

மோடியால் வெல்ல முடியாது
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என்றனர். ஆனால் நாங்கள் சோர்ந்துவிடவில்லையே.. நாடாளுமன்றத்தில் போராடினோம். களத்தில் போராடினோம். இப்போது மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. யாருமே பிரதமர் மோடியால் வெல்ல் முடியும் என்று சொல்வதே இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications