ராகுல் காந்தி வசம் காங்கிரஸ்.. நேரு குடும்பத்திலிருந்து வரும் 4வது தலைமுறை தலைவர்!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்தி நேரு குடும்பத்திலிருந்து 6-ஆவது நபராவார்.
டெல்லி: காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி நேரு குடும்பத்திலிருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6-ஆவது நபராவார்.
1998-ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு பிறகு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். சுமார் 19 ஆண்டுகாலமாக அப்பதவியில் அவர் நீடித்து வந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்க ராகுல் காந்தி கட்சியின் தலைவரானால்தான் முடியும் என்று மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக அறிவித்தனர்.

விழாவில் பேச்சு
சோனியாகாந்தியும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்களின் ஆசை விரைவில் நிறைவேறும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறியிருந்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ராகுல் தலைவராக வேண்டும் என்று 89 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார்.

தொண்டர்கள் கொண்டாட்டம்
அவர் வரும் 16-ஆம் தேதி அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடி பாடியும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேரு குடும்பத்தில் 6-ஆவது நபர்
காங்கிரஸ் தலைவராக ராகுல் 87-ஆவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேரு குடும்பத்தில் அவர் 6-ஆவது நபராவார். மோதிலால் நேரு , அவரது மகன் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி ஆகிய நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை வகித்துள்ளனர். தற்போது 6-ஆவது நபராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications