ராகுல் காந்தி தேசதுரோகி.. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும்.. பாஜக எம்.எல்.ஏ "ஷாக்" பேச்சு
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார். அவர் ஒரு தேச துரோகி. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் செளத்ரி என்பவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏவின் இந்தக் கொலை வெறிப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், பேடூ என்ற தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த கைலாஷ்.

அங்கு நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் பேசுகையில் இப்படிக் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைத் தூண்டி விட்டு, காவல்துறைக்கு எதிராக செயல்படுமாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை முழங்கியவர்களையும், அப்சல் குருவைத் தியாகி என்று கூறியோரையும் எப்போது அவர் ஆதரித்தாரோ, அப்போதே அவர் இந்தியாவில் வசிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார் என்றார் அவர்.
பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கைலாஷ் அளித்த பேட்டியின்போது தான் கூறியதை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். இந்தியாவுக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும். இதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். அது ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி என்றார் கைலாஷ்.
கைலாஷ் செளத்ரியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications