55 நாட்கள் லீவுக்கு பிறகு ராகுல் நாளை டெல்லி திரும்புகிறார்: பராக் பராக் பராக்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 55 நாட்கள் விடுப்புக்கு பிறகு நாளை டெல்லி திரும்புகிறார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய அன்று விடுப்பில் சென்றார். அவர் பாங்காக் சென்றதாக காங்கிரஸார் தெரிவித்தனர். ஆனால் கட்சி தொண்டர் ஒருவரோ ராகுல் உத்தரகண்ட் மலைப்பகுதியில் ஓய்வெடுக்கிறார் என்று கூறி புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இதை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள் அந்த தொண்டர் கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்தனர்.

2 வாரம் விடுப்பு
ராகுல் காந்தி இரண்டு வாரம் விடுப்பில் செல்வதாக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி அறிவித்தனர். ஆனால் அறிவித்தபடி அவர் இரண்டு வாரங்கள் முடிந்த பிறகு டெல்லிக்கு வருவார் என்று எதிர்பார்க்கையில் அவர் விடுப்பை நீட்டித்துள்ளார் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது.

விடுப்பு நீட்டிப்பு
ராகுல் ஒவ்வொரு முறையும் விடுப்பை நீட்டித்துக் கொண்டே தான் போனார். இதனால் 2 வார விடுப்பு தற்போது 55 நாட்கள் விடுப்பாக ஆகியுள்ளது. ராகுல் விடுப்பில் சென்றதால் கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனது.

திருமணம்
ராகுல் காந்தி தனது வெளிநாட்டு காதலியை திருமணம் செய்யவே விடுப்பில் சென்றுள்ளதாகவும், அவர் நாடு திரும்புகையில் மனைவியுடன் வருவார் என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே ராகுல் காந்தியை காணவில்லை என்று ஒரு சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

காயம்
ராகுல் காந்தி உருகுவேயில் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதற்காக அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் ராகுலை பற்றி அவ்வப்போது வரும் செய்திகளில் எல்லாம் உண்மை இல்லை என்று மட்டும் தெரிவிக்கும் காங்கிரஸ் அவர் உண்மையில் எங்கு தான் உள்ளார் என்பதை கூற மறுக்கிறது.

புதன்கிழமை
ராகுல் காந்தி ஏப்ரல் 12 அல்லது 13ம் தேதி டெல்லி திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் டெல்லிக்கு வரவில்லை. இந்நிலையில் அவர் நிச்சயமாக நாளை டெல்லி திரும்புவார் என்றும், 19ம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications