காங். கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை
டெல்லி: இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரசார குழு தலைவராக அறிவிக்கப்படவிருக்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ராகுல் காந்தியை பிரசார குழு தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நடக்கும் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸுக்கு இல்லை என்று நேற்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
இது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
காங்கிரஸுக்கு தெரியும் அது பதவிக்கு வராது என்று. அதனால் தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துள்ளது என்றார்.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications