இந்த நாட்டின் காவலன் ஒரு திருடன்.. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!
Recommended Video

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் ஒரே சச்சரவாக இருக்கிறது. இந்த நாட்டின் காவலனே திருடனாக இருப்பதால்தான் இந்த நிலை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியைத்தான் ராகுல் காந்தி இவ்வாறு வர்ணித்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரபேல் விமானம் தொடர்பான டீலிங்கை அம்பானியிடம் விடடுள்ளார் மோடி. அம்பானி இதுவரை ஒரு விமானத்தைக் கூட தயாரித்ததில்லை. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சருடன் கூட பிரதமர் ஆலோசிக்கவில்லை.
இந்த ஒப்பந்தம் காரணமாக உண்மையான விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு இந்த விமானத்தை வாங்க நேரிட்டுள்ளது. இந்த நாட்டில் நடந்து வரும் ஊழல்களில் மோடிக்கும் ஒரு பங்கு உண்டு.
சீனாவில் ஒரு நாளைக்கு 55,000 பேருக்கு வேலை கிடைக்கிறது. புதிது புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நம்முடைய நாட்டில் என்று அந்த நிலை வரும். நீங்கள் பேசும் செல்போனில் மேட் இன் ராஜஸ்தான், மேட் இன் துங்கார்பூர் என்ற வாசகத்தைக் காண நான் ஆவலாக உள்ளேன்.
நாடு முழுவதும் பல்வேறு சண்டைகள், மோதல்கள், கலவரங்கள். நாட்டின் காவலனே திருடனாக இருப்பதால்தான் இந்த நிலை என்றார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலன் என்று கூறிக் கொள்வது வழக்கம். எனவே மோடியைத்தான் திருடன் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதாக பரபரப்பு வெடித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications