அது சரி, அது சரி.. கத்காரி வீடியோவைப் போட்டு வாரிய ராகுல் காந்தி
Recommended Video

டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கத்காரி, நடிகர் நானா படேகருடன் உரையாடும் ஒரு டிவி நிகழ்ச்சி குறித்த வீடியோவைப் போட்டு பாஜகவை கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கலர்ஸ் டிவியில் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் நானே படேகருடன் (காலா படத்தில் நடித்த அதே நானாதான்.. சமீபத்தில் கூட நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் முறைகேடு புகாரிலும் இவர் சிக்கினார்) உரையாடுகிறார் கத்காரி. அப்போது எதார்த்தமாக அவர் பேசுகிறார்.

அப்போது, நாங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வாக்குறுதிகளை நிறைய வழங்கி வருகிறோம். அதை நிறைவேற்ற முடியுமா என்று தெரியாது. ஆனால் நாங்கள் கூறும் வாக்குறுதிகளை மக்கள் வாய் பிளந்து பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அதுதான் எங்களுக்குத் தேவை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தானே நிறைவேற்றுவது குறித்து நாங்கள் கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கத்காரி.
सही फ़रमाया, जनता भी यही सोचती है कि सरकार ने लोगों के सपनों और उनके भरोसे को अपने लोभ का शिकार बनाया है| pic.twitter.com/zhlKTrKHgU
— Rahul Gandhi (@RahulGandhi) October 9, 2018
இந்தப் பேச்சுக்கு முன்பும், பின்பும் கத்காரி என்ன பேசினார் என்பது அந்த வீடியோவில் இல்லை. எனவே எந்த அர்த்தத்தில் இப்படி கத்காரி பேசினார் என்பது தெரியவில்லை. ராகுல் காந்தி இந்த வீடியோவைத்தான் ஷேர் செய்துள்ளார் தனது டிவிட்டரில்.
[ 5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்! ]
கூடவே, மக்களுக்கும் தெரியும், இந்த அரசு தங்களது கனவுகளையும், நம்பிக்கையையும் பலியாக்கி விட்டது என்றும் ராகுல் காந்தி நக்கலடித்துள்ளார்.
{document1}
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications