2 ஆண்டு சிறையை ரத்து செய்ய மறுத்த கோர்ட்! ராகுலுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் இது மட்டும் தான்! என்ன?
சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சிறை தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுடி செய்துள்ளது. இந்நிலையில் தான் தண்டனையில் இருந்து தப்பிக்க ராகுல் காந்திக்கு உள்ள கடைசி வாய்ப்பு என்ன? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். இந்தியா முழுவதும் அவர் தீவிர பிரசாரம் செய்தார். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது மோடி பெயர் தொடர்பாக சில கருத்துகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கிய லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார். திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது? என கேள்வி எழுப்பியது தான் சர்ச்சைக்கு காரணமாகும்.
இதன்மூலம் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. அதோடு மோடி சமூகத்தினரையும், பிரதமர் மோடியையும் இழிவுப்படுத்தும் வகையில் தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றார்.
இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மேலும் மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே தான் தண்டனையை சுட்டிக்காட்டி அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தான் இன்று ராகுல் காந்தி வழக்கில் குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஹேமந்த் பிரச்சக் தீர்ப்பு கூறினார். அதன்படி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.
இதனால் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகாமல் அப்படியே தொடர்கிறது. இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது. இதற்கிடையே தான் ராகுல் காந்தி தண்டனையில் இருந்து தப்பிக்க கடைசி வாய்ப்பாக ஒன்று மட்டுமே உள்ளது. அது என்னவென்றால் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது மட்டும்தான். இதனால் ராகுல் காந்தி தரப்பில் விரைவில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications