ராகுல் காந்தி 2-வது பாதயாத்திரை! குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை ஒற்றுமை நடைபயணம்!
ராகுல் காந்தி மீண்டும் 2-வது பாதயாத்திரையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ராய்ப்பூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒற்றுமை பயண யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார். குஜராத்தின் போர்பந்தர் முதல் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை தமது 2-வது பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து 150 நாட்கள் 4,080 கி.மீ தொலைவு நடந்தே காஷ்மீரை சென்றடைந்தார் ராகுல் காந்தி. ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ந் தேதி இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது.

ராகுல் காந்தி பாதயாத்திரையானது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக காஷ்மீரை சென்றடைந்தது. ராகுல் காந்தியின் இந்த 5 மாத பாதயாத்திரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க உதவியது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தமது 2-வது பாதயாத்திரையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் 2-வது ஒற்றுமை யாத்திரையானது இந்தியாவின் மேற்கு எல்லையில் தொடங்கி கிழக்கு எல்லை வரை நடைபெறுகிறது. அதேநேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கி குஜராத் வரை இந்த யாத்திரை நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் 2-வது யாத்திரை, குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடங்குகிறது. கிழக்கு எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் பாசி கட் வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் 2-வது பாதயாத்திரை எப்போது தொடங்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் என் அரசியல் பயணம் நிறைவடைகிறது என சுட்டிக்காட்டி பேசியிருந்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரது ஆளுமையை பாரத் ஜோடோ யாத்திரை வலிமையாக வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications