காங்கிரஸை காப்பாற்றனும்னா ராகுல் அரசியலைவிட்டு ஓடனும்... சு.சுவாமி 'பொளேர்'
டெல்லி: காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலைவிட்டே விலகிவிடுவதுதான் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி மும்பையில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகாத்மா காந்தியை கொன்று விட்டனர் என்று கூறினார்.

ஆனால் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான அவதூறு வழக்கு விசாரணையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்." என நான் கூறவில்லை என்று ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராகுல் தன் நிலையில் இருந்து பல்டி அடித்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ராகுல் தன் நிலையில் இருந்து பின்வாங்கியதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ராகுல் அதை ஏற்கவில்லை. தனது நிலையில் உறுதியாக இருப்பதாக ட்விட்டரில் கருத்தை வெளியிட்டார்.
இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.சுவாமி அளித்த பேட்டியில், ராகுல்காந்தி தம்முடைய நிலைப்பாட்டில் உறுதி இல்லாதவர். அவர் ஒரு பெரிய கோழை. 2 முறை அவர் பல்டி அடித்துள்ளார்.
அவருக்கு இந்திய அரசியலில் எதிர்காலம் இல்லை என்பது எனது கருத்தாகும். காங்கிரஸ் கட்சி காப்பாற்றப்பட வேண்டுமானால் ராகுல் அரசியலை விட்டே விலக வேண்டும் என்றார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications