குறிப்புகளை கையில் வைத்து கொண்டு நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சு.. விடுவார்களா வலைவாசிகள்?
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தாக்கிப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கையில் குறிப்புகள் எழுதப்பட்ட பேப்பரை வைத்திருந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வருகிறது. இதனாலேயே நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக முடக்கியும் வைத்தது காங்கிரஸ்.

இந்த நிலையில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் தொடர்பான விவாதம் லோக்சபாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சுஷ்மா ராஜினாமா செய்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
இதற்கு பதிலளித்த சுஷ்மாவோ, ராஜிவ் காந்தி, சோனியா, ராகுல், ப.சிதம்பரம் என பலரையும் கடுமையாக விமர்சித்து வெளுத்து வாங்கினார். இதற்குப் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி களமிறங்கினார். அப்போது பிரதமர் மோடியையும் சுஷ்மாவையும் வறுத்தெடுத்தார் ராகுல்.
வும் மகாத்மா காந்தியின் 3 குரங்குகள் கதையை பிரதமர் மோடிக்கு ஒப்பிட்டெல்லாம் விமர்சித்திருந்தார் ராகுல். அப்போது ராகுலின் கைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட தாள் இருந்தது. அதை சில ஊடகங்கள் படம்பிடித்து வெளியிட சமூக வலைதளங்களோ வழக்கம் போல ராகுலை விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.
தாய்க்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு என்றெல்லாம் ட்விட்டர்வாசி விமர்சித்து வருகின்றனர்.
Pappu was given this sheet to read out y'day. True son of Momma. Check content by zooming the pic pic.twitter.com/C5z1gGR68R
— Tajinder Pal S Bagga (@tajinderbagga) August 13, 2015 அதே நேரத்தில் ராகுல் காந்தி என்ன தேவநாகரி மொழியில் எழுதி வைத்தா படிக்கிறார்? இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா என ராகுலுக்காக வரிந்து கட்டியும் எழுதப்பட்டுள்ளது.
What's the big deal if Rahul Gandhi's notes weren't in Devanagari? Why is this an issue? Is personal freedom not a thing anymore?
— WithRahulGandhi (@withrahulg) August 13, 2015 வலைவாசிகள்னா சும்மாவா?












Click it and Unblock the Notifications