ஊழல் வழக்கு: முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சாட்சியம் அளித்தார்!
டெல்லி: ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்
மன்மோகன்சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன் குமார் பன்சால். கடந்த ஆண்டு மே மாதத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் என்பவரை பணியிடத்தில் நியமிக்க மகேஷ் குமாரிடம் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா என்பவர் ரூ.10 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது.

பணியிட மாற்றத்துக்கு முன்பு, ரூ.5 கோடியும், பிறகு ரூ.5 கோடியும் தருவதாக பேசி முடிக்கப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.90 லட்சத்தை விஜய் சிங்லா பெற்றுக்கொண்டபோது, அவரை கையும், களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
மகேஷ் குமார் மற்றும் தரகர்கள் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் காரணமாக, பவன் குமார் பன்சால் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இவ்வழக்கில் அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
அரசு தரப்பு சாட்சியாக சாட்சி அளிப்பதற்கு பவன் குமார் பன்சாலுக்கு கடந்த 16ந் தேதி ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு குறைவு காரணமாக அன்றையை தினம் ஆஜாரக முடியாது என்றும் வேறு ஒரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications