ரயில்வேயின் மோசமான அலட்சியம்.. சில விநாடிகளில் 3 உயிர்கள் பறிபோன அவலம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரயில்வே விளம்பரப் பலகை கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி-வீடியோ

    புனே: புனே நகரில் ரயில்வே விளம்பரப் பலகை கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனே ரயில் நிலையத்துக்கு அருகே ஷாஹிர் அமர் சேஷக் செளக் என்ற இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலுக்கு அருகே, ரயில் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் 40 அடி உயர பிரமாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அது விதிகளுக்குப் புறம்பானது என்று புகார்கள் வந்தன. இதையடுத்து விளம்பரப் பலகையை எடுக்குமாறு புனே மாநகராட்சி நிர்வாகம் ரயில்வேக்கு கடிதம் எழுதியது.

    Railway hoarding fell on road and kills 3

    ஒருமுறை, இருமுறை அல்ல.. 15 முறை நினைவூட்டல் கடிதம் போனது. ஆனால் ரயில்வே நிர்வாகம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த விளம்பர பலகை திடீரென அப்படியே சாலையில் விழுந்தது. அதில் சிக்கி ஆட்டோ, டூவீலர், கார்களில் சென்றவர்கள், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இந்த திடீர் சம்பவத்தால் அந்தப் பகுதியே பரபரப்பானது. இந்த கோர விபத்தில் சாம்ராவ் கசர் (70), சாம்ராவ் தோத்ரே (48), சிவாஜி பர்தேஷி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த சம்பவத்தில் 5 ஆட்டோ ரிக்ஷா, ஒரு டூவீலர், ஒரு கார் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ரயில்வேயின் அலட்சியம், விளம்பரப் பலகைகையை வைத்தவரின் விதி மீறலுமே 3 உயிர்கள் பறி போக காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+