பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் 'ஆப்' அறிமுகம்
டெல்லி: ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, மொபைல் போன்களில் பயன்படுத்தக் கூடிய,'ஆப்' எனப்படும் செயலியை, ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்தி பெண் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரும் நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியைப் பெறலாம்.
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து டெல்லியில், நேற்று நடந்த ரயில்வே தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, 'ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு, போதிய பாதுகாப்புஇல்லை' என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனியாக பயணம்செய்யும் பெண்களுக்கு, விஷமிகளால் தொல்லை ஏற்படுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளில், கண்காணிப்பு கேமராவை பொருத்தும் நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
அடுத்தபடியாக, மேற்கு ரயில்வேயில், பெண்கள் பாதுகாப்புக்காக, மொபைல் போன்களில் பயன்படுத்த கூடிய, பிரத்யேக ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பெண்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, மொபைல் போனில் உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை உடனடியாக நாடலாம். இதுபோன்று, மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications