கன மழையால் தடம் புரண்ட மும்பை... ரயில், விமான சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முடங்கியது. ரயில் பாதைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் சேவை துண்டிக்காப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தொலைதூர ரயில் சேவையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
மும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது.
|
10 ஆண்டுகளில் இல்லாத மழை
மும்பையில் நேற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 1991ம் ஆண்டு, ஜூன் மாதம் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முடங்கிய மக்கள்
பெருமழை காரணமாக நகரமெங்கும் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர்.
|
ரயில்சேவை பாதிப்பு
ரயில் பாதைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் சேவை துண்டிக்காப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தொலைதூர ரயில் சேவையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
|
விமான சேவை பாதிப்பு
கனமழை நீடிப்பதால் மும்பை விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் ஆமதாபாத் மற்றும் பரோடா ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

அச்சுறுத்தும் பேரலைகள்
கனமழையோடு, கடலில் பேரலைகள் எழலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன்படி, இன்று மதியம் முதல் மும்பை கடல் பகுதியில் பெரிய அளவிலான அலைகள் எழுந்து அச்சுறுத்தி வருகின்றன. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications