மும்பையை பிரிக்க நினைத்தால் வெட்டிப்புடுவேன்.. பா.ஜ.கவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பா.ஜ.க பிரிக்க திட்டமிடுவதாக நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை: பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் மும்பையை எப்படியாவது குஜராத்துடன் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மும்பையை யாராவது பிரிக்க திட்டமிட்டால் அவர்களின் கால்களை வெட்டுவென் என்றும் ராஜ்தாக்ரே எச்சரித்துள்ளார்.
மும்பை தாதரில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, மும்பை உட்பட மாநிலத்தில தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சிகளிலம் நவநிர்மாண் சேனா கட்சி போட்டியிடும் என்றார்.

மும்பை நகரை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க பா.ஜ.க திட்டமிடுவதாக அவர் குற்றம்சாட்டினார். மும்பையை யாராவத மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்றும் ராஜ்தாக்கரே எச்சரித்தார்.
மும்பையில் அதிகளவில் பணப்புழக்கம் இருப்பதால் மும்பையை எப்படியாவது குஜராத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குஜராத் மக்கள் கனவு காண்பதாகவும் அவர் தெரிவவித்தார். அந்தக் கனவு பலிக்காது என்றும் ராஜ்தாக்கரே கூறினார்.
இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியும் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தான். மத்தியிலும், மராட்டியத்திலும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்ற அவர்கள் முயல்வதாகவும் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications