Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை தீர்த்து கட்டிய சோனம்.. மேகாலயாவில் இருந்து தப்பித்தது எப்படி! ஹனிமூன் கொலையில் பகீர்

Subscribe to Oneindia Tamil

ஷிலாங்: மேகாலயாவில் ஹனிமூன் கொலையில் தோண்ட தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு சோனம் எப்படி மேகாலயாவில் இருந்து தப்பித்தார் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது.

மேகாலயாவில் ஹனிமூன் கொண்டாடியபோது ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் குஷ்வாவும் சேர்ந்து கொலை செய்த சம்பவம், நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் இப்போது தெரிய வரும் தகவல்கள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக இருக்கிறது

How Sonam Escaped After Raja Raghuvanshi s Honeymoon Murder

இதற்கிடையே சோனம் மற்றும் அவருடன் இணைந்து ராஜாவை கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க மேகாலயா காவல்துறை மேற்கொண்ட "ஆபரேஷன் ஹனிமூன்" குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது!

அதாவது ராஜா மற்றும் சோனம் மே 23ஆம் தேதி மேகாலயாவின் நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஷிபரா ஹோம் ஸ்டேயிலிருந்து வெளியே கிளம்பும்போது கடைசியாகக் காணப்பட்டனர். சுமார் 10 நாட்கள் கழித்து அவரது உடல் ஜூன் 2ஆம் தேதி ஒரு பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து, சோனமும் அவரது காதலனும் இணைந்து ஆகாஷ், ஆனந்த் மற்றும் விகாஷ் ஆகிய மூன்று கூலி படையினர் மூலம் ராஜாவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உத்தரப் பிரதேசத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், கொலைக்குப் பிறகு சோனம் தலைமறைவானது, கொலைக்கான காரணம், குற்றவாளிகளின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யத் திட்டம்

ராஜாவுக்கும், சோனமும் மே 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே ராஜாவைக் கொலை செய்ய சோனம் மற்றும் அவரது காதலன், ராஜ் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காகவே ராஜாவை சோனம் வற்புறுத்தி மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் மே 20ஆம் தேதி ஹனிமூன் கொண்டாட மேகாலயாவுக்குச் சென்றனர். மறுநாள், அவர்கள் மாநில தலைநகர் ஷில்லாங்கை அடைந்தனர்.

ராஜாவை கொலை செய்ய கூலி படையினர் மே 21ஆம் தேதி கவுகாத்திக்கு வந்தனர். அங்கிருந்து மே 22ஆம் தேதி ஷில்லாங்கிற்கு சோனம் மற்றும் ராஜாவை பின்தொடர்ந்து சென்றனர். மே 23ஆம் தேதி கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம்தான் அந்த ஜோடி மாயமானது. எனவே, அன்று தான் கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தப்பித்தது எப்படி

இந்த கொலை சோனம் கண் எதிரேதான் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனம்தான் கூலிப்படையினரை ஏவி ராஜாவைக் கொலை செய்யச் சொன்னதாக மூன்று குற்றவாளிகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுவே சோனமுக்கு எதிராக உள்ள முக்கிய சாட்சியாக இருக்கிறது. கொலைக்குப் பிறகு, சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு குற்றவாளிகளும் ஒன்று கூடியுள்ளனர். சோனமின் காதலன் ராஜ் மேகாலயாவுக்கு வராத நிலையில், கூலி படையினரை சோனம் மட்டுமே சந்தித்துள்ளார்.

தொடர்ந்து சோனம் கவுகாத்தி சென்று அங்கிருந்து ரயில் மூலம் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார். மே 25ஆம் தேதி இந்தூருக்கு வந்த அவர், அங்கு ராஜ் ஏற்பாடு செய்திருந்த வாடகை வீட்டில் தங்கினார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் ராஜ் அருகிலுள்ள மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர், அவர்கள் ஒரு காரை ஏற்பாடு செய்து சோனமை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி வைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீசில் சரண்

சோனம் ஜூன் 8ஆம் தேதி இரவு காஜிப்பூரில் சரணடைந்தார். அவர் மன உளைச்சலுடன் இருந்ததாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+