பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நாளை திருப்பதி வருகிறார் ராஜபக்சே - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நாளை திருப்பதி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, நாளை மறுதினம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ராஜபக்சேவின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டங்களுக்குக் கூட அவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், ராஜபக்சே வருகையை ஒட்டி ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதைகள், வராக சுவாமி கோயில், தங்க ரதம் இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை அமைச்சர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications