ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ருத்ரதாண்டவம்.. லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் "கொத்தாக” கைது!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ15 லட்சம் லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மியும் களத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இடைவிடாமல் சோதனைகளை நடத்தி வருகின்றனர். தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன்களை குறிவைத்திருக்கிறது அமலாக்கத்துறை. கடந்த அக்டோபர் 30-ந் தேதி அசோக் கெலாட் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் கெலாட்டின் 2 மகன்களும் நேரில் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை.
இதனிடையே ராஜஸ்தான் மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் ஏலச் சீட்டு மோசடி வழக்கு ஒன்றில் இருந்து விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்னர்.

என்ன வழக்கு?: அமலாக்கத்துறை அதிகாரிகள் நவல் கிஷோர் மீனா, பாபுலால் மீனா. இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏலச்சீட்டு மோசடி நபர்களிடம் ரூ15 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர் இந்த அதிகாரிகள். அப்போதுதான் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தை கத்தையாக கைப்பற்றி உள்ளனர். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications