மனம் மாறிய பாஜக! ராஜஸ்தானில் மீண்டும் வசுந்தரா போட்டி! கெலாட், பைலட்டுக்கு காங்கிரஸ் வாய்ப்பு-லிஸ்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ‛கல்தா' கொடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு மீண்டும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் அசோக கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 101இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவும் முயன்று வருகிறது. இதற்கிடையே தான் பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனால் வசுந்தர ராஜே கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
அதோடு பாஜகவின் தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகியவற்றிலும் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் வரும் தேர்தலில் வசுந்தர ராஜேவுக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.
அதாவது ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜி சிந்தியாவுக்கு ஜால்ராபதன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2003, 2008, 2013, 2018 என தொடர்ந்து 4 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது 5வது முறையாக அந்த தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இன்று 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் சர்தார்புரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் இந்த தொகுதியில் இருந்து 1998, 2003, 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அங்கு போட்டியிட்டுள்ளார்.
மேலும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் டோங்க் சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ளார். சச்சின் பைலட் தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அவர் அங்கு களமிறங்கி உள்ளார். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ், பாஜக கட்சியினர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அங்குள்ள அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications