ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்.. முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக 'சாதி'
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக சில முக்கிய சாதிகளே இருப்பதால் பிரதான கட்சிகளின் பிரசாரமும் அவற்றை மையப்படுத்தியே இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளுடன் பகுஜன் மற்றும் இடதுசாரிகளும் மல்லுக் கட்டுகின்றன.

200 தொகுதிகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 141 பொதுத் தொகுதிகள். பழங்குடி இனத்தவர் தொகுதிகள் எண்ணிக்கை- 25. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 34.

45,000 வாக்குச் சாவடிகள்
இம்மாநிலத்தில் மொத்தம் 45,334 வாக்குச் சாவடிகள் உள்ளன.

சம பலத்தில் காங்கிரஸ்- பாஜக
2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 35.60% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 36.92% வாக்குகளும் கிடைத்தன. அதாவது நம்ம ஊர் திமுக, அதிமுக போல சம பலத்தில் இருக்கின்றன பாஜகவும் காங்கிரஸும்.

காங்கிரஸ் -96
காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வென்றது.

பாஜக- 78
பாரதிய ஜனதா கட்சி 193 தொகுதிகளில் போட்டியிட்டு 78 இடங்களைக் கைப்பற்றியது.

ஆச்சரிய பகுஜன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்வாக்காக திகழும் பகுஜன் சமாஜ்கட்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் 199 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதன் வாக்கு சதவிகிதம் 7.66%.

சிபிஎம்-க்கு 3
34 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இடதுசாரிகள் டெபாசிட் இழப்பு
34 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர்களில் 29 பேர் டெபாசிட் இழந்தனர். 21 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் இழந்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி 9.22%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.11% வாக்குகளைப் பெற்றிருந்தது.

சாதிகளே தீர்மானிக்கும் சக்தி
ராஜஸ்தானில் கடந்த தேர்தல்களைப் போலவே தற்போதும் ராஜ்புத்திரர்கள், பிராமணர்கள், குர்ஜார்கள், மீனாக்கள் போன்ற முக்கிய சாதிகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதனால் பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளும் கூட தேர்தல் அறிக்கையில் இந்த சாதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களிலும் சாதிய பிரபலங்களை மேடையேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன கட்சிகள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications