ராஜஸ்தான் சட்டசபை.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு.. முதல்வர் அசோக் கெலாட் திட்டம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் இன்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாதமாக நடந்து வந்த ராஜஸ்தான் அரசியல் மோதல் முடிவிற்கு வந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக களமிறங்கி தற்போது மீண்டும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இவர் ஆட்சிக்கு எதிராக திரும்பிய காரணத்தால், இவரின் துணை முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செய்த சமாதானத்தை தொடர்ந்து சச்சின் பைலட் தனது ஆதாரவாளர்களுடன் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபையில் இன்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சட்டசபையின் முதல் நாளே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உறுதியாக இருக்கிறது. இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் கண்டிப்பாக அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த நிலையில் பாஜகவிற்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் சேர்த்து மொத்தம் 107 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 124 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
பாஜக கட்சிக்கு அங்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பாஜக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்று அங்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications