அவர்களால் எம்.பி ஆனவரை வைத்தே காங்கிரஸின் கண்ணைக் குத்தும் பாஜக.. சூழ்ச்சியை உடைக்க அதிரடி திட்டம்?
உதய்பூர் : வரும் ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் பாஜகவால் விலைக்கு வாங்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் ராஜஸ்தான் எம்எல்ஏக்களை உதய்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்க அம்மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் இந்த வார இறுதிக்குள் உதய்பூருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் சிலர் இன்றே உதய்பூர் ரிசார்ட்டுக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களும் ரிசார்ட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராஜ்ய சபா வேட்பாளர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாநிலங்களவை எம்.பிக்கள் பதவி காலியாகும் நிலையில், ஜூன் 10ஆம் தேதி 4 இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

3வது எம்பியை தேர்ந்தெடுக்க
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த மூலம் மொத்த காலியிடங்களான 4ல் 2 இடங்களை காங்கிரஸ் எளிதாகக் கைப்பற்றும். ஒவ்வொரு எம்.பி வெற்றி பெறவும் அங்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை. மூன்றாவது இடத்தைப் பெற காங்கிரஸுக்கு மேலும் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

பா.ஜ.கவில்
ராஜஸ்தானில் பாஜகவில் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 41 எம்.எல்.ஏக்களை கொண்டு ஒரு எம்.பியை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். பாஜக இன்னொரு எம்.பியை தேர்ந்தெடுக்க அதற்கு கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் ராஜ்ய சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடைசி சீட் யாருக்கு
2 இடங்களை ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியும், 1 இடத்தை மத்தியில் ஆளும் பாஜகவும் எளிதாகக் கைப்பற்றும் நிலையில், நான்காவது இடத்திற்கு காங்கிரஸ் சார்பில் ஒருவரும், பாஜக ஆதரவோடு சுயேட்சை ஒருவரும் களத்தில் இருப்பதால் ராஜஸ்தான் அரசியல் வட்டாரம் பரபரப்பை அடைந்துள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்படலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.

சிக்கல் ஏற்படுத்தவே
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் கூடுதல் வேட்பாளரை களமிறக்கியுள்ளது பாஜக. ஹரியானாவில், பாஜக சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவை ஆதரிக்கிறது. ராஜஸ்தானில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு பாஜக ஆதரவளிக்கிறது.

உதய்பூர் ரிசார்ட்
இந்நிலையில்தான், தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக உதய்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். சமீபத்தில் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தன் ஷிவிர் சிந்தனை அமர்வு நடைபெற்ற ரிசார்ட்டே எம்.எல்.ஏக்களை தங்க வைப்பதற்கும் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸால் எம்பி ஆனவர்
எஸ்செல் குழும தலைவரும், ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவருமான சுபாஷ் சந்திரா, பாஜக ஆதரவோடு ராஜ்யசபா தேர்தல் களத்தில் இருக்கிறார். சுபாஷ் சந்திரா 2016-ல் ஹரியானாவில் சுயேட்சையாக ராஜ்ய சபா எம்.பியாக போட்டியிட்டபோது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கட்சி உத்தரவை மீறி ஆதரித்து வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இப்போது அவராலேயே சிக்கல்
இந்நிலையில், தற்போது சுபாஷ் சந்திரா, ராஜஸ்தானில் பாஜக ஆதரவோடு போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது எம்.பி வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். அன்று சுபாஷ் சந்திரா எம்.பி ஆனதற்காக காங்கிரஸின் 12 எம்.எல்.ஏக்கள் பதவி இழந்தனர். இன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி ஆவதற்கு சுபாஷ் சந்திராவே பாஜகவுக்கு துணையாக நின்று காங்கிரஸுக்கு குடைச்சலாக மாறியுள்ளார்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications