Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாடு வேணுமா.. பிச்சை எடுங்க.. சொத்துக்காக மகன்கள் கொடுமை.. ராஜஸ்தான் தம்பதி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: முதியோர் இல்லம் பெருகி வரும் இந்த காலத்தில், முதியவர்கள் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் சொத்து விவகாரத்தில் பெற்ற மகன்களே பெற்றோரை அடித்து துன்புறுத்திய சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொத்துகளை பறித்து, அவர்களுக்கு உணவு கூட கொடுக்காமல் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்த துயரம் நடந்துள்ளது.

நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எந்த ஆதரவும் இல்லாதவர்களை விட, பெற்ற மகன் அல்லது மகள்கள் இருக்கும்போதே கைவிடப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

rajasthan couple

சமீபத்தில் கன்னியாகுமரியில், வயதான முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத தன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்று மகன்கள் இருந்தும், உடன் யாரும் இல்லாத நிலையில் மனைவியை கவனிக்க முடியவில்லை என அவர் தன் மனைவியை கொலை செய்திருந்தார்.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஹசாரிராம் பிஸ்னாய் (வயது 70). அவரின், மனைவி சாவ்லி தேவி (வயது 68). இந்த வயது முதிர்ந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஹசாரிராம், சாவ்லி அவர்களின் வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தம்பதியை கடந்த இரண்டு நாட்களாக வெளியில் காணவில்லை என அருகில் வசிப்போர் மகன்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காவல்துறை உதவியுடன் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் இருவரின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன.

இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறை விசாரணையில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், அந்த தம்பதியின் மகன்களும், மருமகள்களும் சொத்து பிரச்னையில் சித்திரவதை செய்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளனர். சொத்து கேட்டு மகன்கள், அவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

rajasthan couple

மேலும் அவர்கள் சொத்து, கார் உள்ளிட்ட அனைத்தையும் பிடுங்கிவிட்டு நிற்கதியாக தவிக்கவிட்டுள்ளனர். வயதான அப்பா அம்மாவுக்கு உணவு கூட கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து கேட்டற்கு, பிச்சை எடுங்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கம் என நினைத்துள்ளார்கள். ஆனால், இந்தப் பிரச்னையை வெளியில் சொன்னால், உங்களை தூக்கத்திலேயே கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்வாலா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹசாரிராம், சாவ்லி இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆசை ஆசையாய், பெற்று வளர்த்த பெற்றோரை இப்படி துன்புறுத்த எப்படி மனம் வந்தது. இவர்களின் மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி வருகின்றனர். காவல்துறையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+