காந்தி குடும்ப நம்பிக்“கை”.. காங்கிரஸ் தலைவர் பதவியையே உதறிய அசோக் கெலாட்! ராஜஸ்தான் முதல்வராவாரா?
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் தேசிய தலைவராகும் வாய்ப்பு கிடைத்த பிறகும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியை விட்டுத்தராமல் கிடைத்த வாய்ப்பை உதறிய அசோக் கெலாட் யார்? இந்த தேர்தலில் அவர் வெல்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 75.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்று அசோக் கெலாட் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. காரணம், இந்த முதலமைச்சர் பதவிக்காக அசோக் கெலாட் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியையே உதறித் தள்ளியவர்.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கும் அசோக் கெலாட் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் ஆவார். காந்தி குடும்பம் அல்லாதவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது முதல் சாய்ஸாக தேர்வு செய்யப்பட்டவர் அசோக் கெலாட். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது காந்தி குடும்ப ஆதரவுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உட்கட்சி பூசல்கள், பாஜகவின் ஆபரேசன் தாமரை, கட்சி தாவல் மூலம் அப்போது கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் வசப்படுத்தி ஆட்சியை பிடித்தது பாஜக. அதே பார்முலாவை ராஜஸ்தானிலும் பயன்படுத்தியது. சச்சின் பைலட் உடனான மோதல் நடவடிக்கையால் எப்போது வேண்டுமானாலும் ராஜஸ்தானில் ஆட்சி கவிழலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் தனது அனுபவத்தால் ஆட்சியை தக்க வைத்தார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என அவரது அதரவாளர்கள் குரல் எழுப்பினர். இது தொடர்பாக காந்தி குடும்பமும் அசோக் கெலாட்டை அழைத்து பேசியதாக கூறப்பட்டது. காங்கிரஸ் தேசிய தலைவராக தேர்வாகி அகில இந்திய தலைவராக உயர வேண்டுமா? அல்லது ஓராண்டில் முடியப்போகும் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை தொடர்வதா என்று வந்தபோது முதலமைச்சர் பதவியை தேர்வு செய்தால் கெலாட். இன்றைய தேர்தலில் இவர் வெற்றிபெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications