அப்பாடா.. ஒரே போஸ்டரில் சிரிக்கும் சச்சின் பைலட்-அசோக் கெலாட்.. காங்கிரசுக்கு நிம்மதி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் ஒன்றாக போஸ்டர்களில் சிரித்தபடி இருக்கிறார்கள். காங்கிரஸின் 7 உத்தரவாதங்கள் என்ற போஸ்டர்களில் சச்சின் பைலட்டும் கெலாட்டும் ஒன்றாகக் காணப்படுகிறார்கள். இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது முதல்வராக உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் ராஜேந்திர சிங் ரத்தோர் தலையிலான பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 2024ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அறிவித்த இலவச வாக்குறுதி பாணியை, கர்நாடகாவை தொடர்ந்து காங்கிரஸ் ராஜஸ்தானிலும் அறிவித்துள்ளது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டியாக உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு மூத்த தலைவரான அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவரான சச்சின் பைலட் ஆகிய இருவரையும் ஒன்று சேர்த்து செயல்பட வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.. இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் இருக்கிறது. கர்நாடாகவில் எப்படி சித்தராமையா, டிகே சிவகுமார் அணிகள் உள்ளனவோ அதுபோல் தான் அசோக்கெலாட் ஒரு அணியாகவும், சச்சின் பைலட் ஒரு அணியாகவும் உள்ளனர். இவர்கள் இருவரையும் ஒற்றுமையாக தேர்தல் பணி ஆற்ற வைப்பதே காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் ஒன்றாக போஸ்டர்களில் சிரித்தபடி இருக்கிறார்கள். இந்த போஸ்டர்கள் தான் ஜெய்ப்பூர் முழுக்க காணப்படுகிறது. காங்கிரஸின் 7 உத்தரவாதங்கள் என்ற போஸ்டர்களில் சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் ஒன்றாக சிரித்தபடி இருக்கிறார்கள். முன்னதாக சச்சின் பைலட்டின் பிறந்தநாளையொட்டி தலைநகர் ஜெய்ப்பூரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது . முதல்வர் அசோக் கெலாட்டின் உத்தரவின் பேரில் இந்த போஸ்டர் அகற்றப்பட்டதாக சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ வேத்பிரகாஷ் சோலங்கி நேரடியாக குற்றம்சாட்டினார்.
இதற்குப் பிறகு, ஜெய்ப்பூரில் சச்சின் பைலட்டின் போஸ்டர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், போஸ்டர்களில் சச்சின் பைலட் படங்கள் அதிக அளவில் இருக்கின்றன. சச்சின் பைலட் ராஜஸ்தானில் 40 இடங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என அந்த மாநில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மாநிலத்தின் சுமார் 9 சதவீத குர்ஜார் வாக்குகளை கைப்பற்றுவதற்காக க்ரிஹ லக்ஷ்மி யோஜனா போஸ்டர்களில் கெலாட் மற்றும் பைலட் போஸ்டர்களில் ஒன்றாக சிரித்தபடி நிற்கிறார்கள்.
முதல்வர் கெலாட்டின் செல்வாக்கு உள்ள பகுதிகளில் சச்சின் பைலட் பேரணியோ, பொதுக்கூட்டமோ நடத்தவில்லை. இதேபோல், சச்சின் பைலட் பகுதிகளில் கெலாட் பிரச்சாரம் செய்யவில்லை. அதுதான் அங்கு எதார்த்தமான நிலையாக உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications