ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.? மீண்டு(ம்) வருகிறார் வசுந்தராஜே சிந்தியா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. அம்மாநிலத்தில் வசுந்தராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தோல்வியைத் தழுவிய நிலையில் வசுந்தராஜே சிந்தியாவை ஓரம்கட்டும் முயற்சிகள் அக்கட்சியில் நடைபெற்றன.
ஒருகட்டத்தில் வசுந்தராஜே சிந்தியா, பாஜகவை விட்டு தமது ஆதரவாளர்களுடன் வெளியேறி தனிக்கட்சி அமைப்பார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒருவழியாக அனைத்தையும் சமாளித்து வசுந்தராஜேவை முன்வைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

மோடி- ராகுல் பிரசாரம்
இம்மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் பிரசாரம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.

காங்கிரஸுக்கு 75 இடங்கள்
மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இம்முறை 70 முதல் 75 தொகுதிகள் வரை கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.

பாஜகவுக்கு?
பாரதிய ஜனதா கட்சிக்கோ நிச்சயம் 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்புகள்.

வசுந்தராவுக்கு ஆதரவு
இதேபோல் மாநில முதல்வராக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கருத்துக் கணிப்புகளில் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர் வாக்காலர்கள்.

காங்கிரஸில் கெலாட், சச்சின் பைலட்
தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கு 2வது இடத்தையும் சச்சின் பைலட்டுக்கு 10 முதல் 15% பேர் ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர்.

ஊழல்தான் காரணம்?
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்துள்ளதே அதன் பின்னடைவுக்கு காரணம். அதேபோல் மின்வெட்டு, குடிநீர் பிரச்சனையும் காங்கிரஸ் அரசு மீதான அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது.;

பாஜகவுக்குள் தொடரும் கோஷ்டி பூசல்
காங்கிரஸ் மீது இத்தனை அதிருப்தி நீடிக்கும் நிலையில் பாரதிய ஜனதாவுக்குள் பஞ்சாயத்தும் தொடருகிறது. வசுந்தராஜே சிந்தியாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளடி வேலைகளையும் காட்டி வருகின்றனர். இது வசுந்தராஜே சிந்தியாவுக்கு நெருக்கடியையும் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications