கசந்த புருஷன்.. கல்கண்டாக இனித்த காதலன்.. வீட்டை விட்டு ஓடிய பெண்.. தந்தை செய்த பகீர் காரியம்!
மகளுக்காக 2 பேரை பெற்ற தந்தை கொலை செய்துள்ளார்
ஜுன்ஜுனு, ராஜஸ்தான்: இதுவும் ஒரு கள்ளக்கதால் கதைதான்.. ஆனால் கதையின் முடிவுதான் இனிப்புக்குப் பதில் சோகமாக முடிந்து போய் விட்டது. ஆம், 2 பேரின் கொலையில் முடிந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற ஊரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த ஊரைச் சேர்ந்தவர் அனில் ஜாட். இவரது மகள் சுமன். இவருக்கும் நரேந்திர ஜாட் என்பவருக்கும் திருமணம் ஆனது. ஆனால் திருமணமானது முதலே சுமன் சந்தோஷமாக இருக்கவில்லை. அதாவது புருஷனுடன் சந்தோஷமாக இல்லை. எதையோ பறி கொடுத்தவர் போலவே இருந்துள்ளார்.

காரணம் அவருக்குள் ஒரு காதல் கதை ஒளிந்திருந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் ஜுன்ஜுனு பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் சுமனுக்கும் இடையே பற்றிக் கொண்டு விட்டது. இருவரும் காதலில் மூழ்கித் திளைத்துள்ளனர். காதல் என்றால் சும்மா காதல் இல்லை.. கல்யாணத்திற்குப் பிறகும் கூட சுமனால் சும்மா இருக்க முடியவில்லை.
காதல் ருசியை சுவைத்த மனசு சும்மா இருக்குமா.. இருக்காதே.. எனவே கிருஷ்ணாவைத் தேடியே அவரது மனம் ஓடியுள்ளது. அதிர்ச்சி அடைந்தார் கணவர். இந்த நிலையில்தான் திடீரென காணாமல் போனார் சுமன். அதிர்ச்சி அடைந்த அனில் ஜாட் மகளைத் தேடியபோதுதான் அவர் கிருஷ்ணாவுடன் ஓடி விட்டது தெரிய வந்தது. புருஷன் பக்கத்தில் இருந்தும் கூட அவனை விட்டு விட்டு காதலனுடன் ஓடிய மகளை நினைத்து ஆத்திரமடைந்தார்.
உடனே கிருஷ்ணாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு எனது மகள் திரும்ப வர வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை பேரையும் காலி செய்து விடுவேன் என்று எச்சரித்தார். ஆனால் சுமன் திரும்ப வரவில்லை. இதனால் ஆத்திரம் மண்டைக்கேறிய அவர் உடனே ஹரியானா மாநிலம் மகேந்திரகர் ஊருக்குக் கிளம்பிப் போனார். அங்கு கிருஷ்ணாவின் சகோதரர் தீபக் (20 வயசு), அவருடைய நண்பர் நரேஷ் (19) ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து அனில் ஜாட்டைக் கைது செய்தனர். இவர் ஒரு பலே கிரிமினல் பேக்கிரவுண்ட் உள்ள பேர்வழி போல. ஏற்கனவே இவர மீது மோசடி, கலவரம் செய்வது, ஆயுதம் பதுக்கியது என ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஐந்து வழக்குகள் உள்ளனவாம். இந்த நிலையில் மகள் ஓடிப் போனதால் ஆத்திரமாகி இரட்டைக் கொலை செய்து அதில் சிக்கியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications