ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்- 199 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் முடிவடைந்து விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியில் பகுஜன் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டு வருகிற 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

199 தொகுதிகளில் வாக்கு பதிவு
எஞ்சிய 199 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றமான தொகுதிகளின் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையும், துணை ராணுவ படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

4.08 கோடி வாக்காளர்கள்
நாளை நடைபெறும் தேர்தலில் மொத்தம் 4.08 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதில் ஆண்கள் 2.15 கோடி பேர். பெண்கள் 1.93 கோடி பேர்.

2087 வேட்பாளர்கள்
199 தொகுதிகளிலும் 2087 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 47,200 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
நாளைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.

காங்கிரஸ் ஆட்சி
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை இங்கு பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்வர் பதவி வகித்தார். அந்த ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி மற்றும் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக
இம்முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா களம் இறங்கியுள்ளது. கோஷ்டி பூசலை தவிர்க்க பாரதிய ஜனதா மாநில தலைவராக வசுந்தரா ராஜேசிந்தியா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தேர்தல் பணிக்குழு செயல்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டு காலமாக ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இந்த முறை இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதாவுக்கு மயிரிழையில்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications