கள்ளக்காதல்.. 2வது திருமணம் தான் முக்கியம்.. 10 குழந்தைகளை தவிக்கவிட்டு எஸ்கேப்பான ராஜஸ்தான் ஜோடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 5 குழந்தைகளின் தாய்க்கும், 5 குழந்தைகளின் தந்தைக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தங்களின் குழந்தைகளை கைவிட்டுவிட்டு ஒருவரையொருவர் 2வது திருமணம் செய்து கொண்டனர்.
காதலித்து திருமணம் செய்வது என்பது தவறு இல்லை. ஆனால் கள்ளக்காதலில் விழுந்து குழந்தைகள் கைவிட்டு திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் கொடுமையானது.
இத்தகைய சம்பவம் ஒன்று தான் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இது தற்போது அங்கு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ராஜஸ்தான் தம்பதி
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கோஹரி கிராமத்தை சேர்ந்தவர் தைபு. லாரி டிரைவர். இவருக்கும் ஹரியானாவை சேர்ந்த நூர்ஜஹான் (வயது 28) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

கணவரை பிரிந்த மனைவி
இந்நிலையில் தான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நூர்ஜஹான் தனது கணவரை பிரிந்தார். அவரது மூத்த மகன் ஹரியானாவில் உள்ள தனது தாய் வீட்டில் வசிக்கும் நிலையில் மற்ற 4 பேரும் நூர்ஜஹானுடன் வசித்து வந்தன

மலர்ந்த காதல்
இந்நிலையில் தான் பக்கத்து வீட்டில் வசிக்கும் மவுசம் கான் என்பவருக்கும், நூர்ஜஹானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மவுசம்கானுக்கும் திருமணமாகி மனைவி, 5 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் நூர்ஜஹான்-மவுசம்கான் ஆகியோர் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தங்களின் குழந்தைகளை கைவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

2வது திருமணம் செய்த ஜோடி
இதன் தொடர்ச்சியாக நூர்ஜஹான்-மவுசம்கான் ஆகியோர் திடீரென்று 2வது திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்து இருவரின் குடும்பமும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக நூர்ஜஹானின் கணவர் மற்றும் மவுசம்கானின் மனைவி கடும் கோபம் கொண்டனர். குழந்தைகளின் எதிர்காலத்தை இருவரும் நினைத்து பார்க்கவில்லையே என அக்கம்பக்கத்தின் கூறினர்.

குழந்தைகள் நிலை என்ன?
இதையடுத்து மவுசம்கானை அவரது முதல் மனைவி பிரிந்தார். அவர் தன்னுடன் தனது 5 குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து நூர்ஜஹான் தனது குழந்தைகளை காப்பகத்தில் விட்டு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து குழந்தைகளை அவர் காப்பகத்தில் விட்டார். ஆனால் குழந்தைகள் அங்கு தாயான நூர்ஜஹானை பிரிய முடியாமல் அழுதனர். இருப்பினும் நூர்ஜஹான் தனது குழந்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அவரது 4 குழந்தைகளும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட 10 குழந்தைகள்
மேலும் சம்பவம் தொடர்பாக மவுசம்கான் மீது அவரது மனைவி சாதர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 2 வது திருமணம் செய்த நூர்ஜஹான் தனது 5 குழந்தைகளையும், மவுசம்கான் தனது 5 குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். மொத்தம் 10 குழந்தைகளை அவர்கள் கைவிட்டு திருமணம் செய்துள்ளது ராஜஸ்தானில் விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications