கோயிலுக்குள் சிறுமியின் அலறல் சத்தம்.. சாமியாரின் செயலால் மக்கள் அதிர்ச்சி! போக்சோவில் கைது
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே 5 வயது சிறுமியை கோயிலுக்குள் வைத்து 60 வயது சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆல்வார் மாவட்டம் மலாகெடா பகுதியை சேர்ந்தவர் சுன்னா. 60 வயதாகும் இவர் அங்குள்ள கோயிலில் சாமியாராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோயிலுக்கு அருகே 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த சிறுமியை கண்ட சாமியார் சுன்னா, அவரிடம் பணம் தருவதாக கூறி கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். கோயில் உள்ளே நுழைந்தவுடன் சிறுமியிடம் சாமியார் சுன்னா தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுன்னா சிறுமியை கொடூரமாக தாக்கி இருக்கிறார்.
சாமியாரின் தாக்குதல்களால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார். கோயிலுக்குள் இருந்து சத்தம் வருவதை கேட்ட அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமியிடம் சாமியார் சுன்னா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பொதுமக்கள் கண்டனர்.
ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியை காப்பாற்றியதுடன் சாமியார் சுன்னாவை கோயிலில் வைத்தே தாக்கினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாமியார் சுன்னாவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications