அப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை.. ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் உருக்கம்
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது.
Recommended Video

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது. முகுத் பிகாரி மீனாவின் 5 மாத குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. குப்வாரா தொடர்ந்து திடீரென்று இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.
|
பரிதாப பலி
இந்த நிலையில் கடந்த வாரம் குப்வாரா காட்டிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ராஜஸ்தானின் ஜாலாவர் கிரமாத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா பரிதாபமாக பலியானார். அதேபோல் இரண்டு தீவிரவாதிகள் இதில் படுகாயம் அடைந்தனர்.
|
இறுதி சடங்கு நடத்தினார்கள்
அவரது உடலுக்கு சொந்த கிராமத்தில் இருந்து சடங்கு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. 5 மாத குழந்தை ஒன்றும் இருக்கிறது.
|
வைரல் புகைப்படம்
இந்த நிலையில், அந்த 5 மாத பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாமல், சவப்பெட்டி மீது, உட்கார்ந்து இருக்கிறாள். பின் தூக்கம் வந்த அவள் அப்படியே பெட்டியின் மீதே படுத்துவிடுகிறாள். இந்த புகைப்படம் இணையம் முழுக்க வெளியாகி மக்களை உறைய செய்துள்ளது.
|
கடிதம் எழுதினார்
இந்த நிலையில் அந்த பெண் குழந்தைக்கு, ஜாலாவர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்தர் சோனி கடிதம் எழுதியுள்ளார். அதில் ''உன்னை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. நீ அந்த சவப்பெட்டியில் இந்திய கொடியின் மீது அமர்வதற்கு முன்புதான் உன் தந்தையின் முகத்தை பார்த்தாய்.அது அங்கு இருந்த எல்லோருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்தது. நீ பெரிய பெண்ணாக வளர வேண்டும். உன்னுடைய அப்பா பெருமையடையும் வகையில் நீ வாழ வேண்டும்'' என்றுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications