இந்தியா டுடே குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டரானார் ராஜ்தீப் சர்தேசாய்!
டெல்லி: சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த ராஜ்தீப் சர்தேசாய் இன்று முதல் இந்தியா டுடே குழுமத்தில் 'கன்சல்டிங் எடிட்டர்' என்ற பொறுப்பில் இணைந்துள்ளார்.
சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி டிவி 18 நெட்வொர்க் குழுமத்தைச் சேர்ந்தது. இக்குழுமத்தை ரூ4 ஆயிரம் கோடிக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த ஜூலை மாதம் வாங்கியது.

ஐ.பி.என்-ல் இருந்து விலகல்
இதைத் தொடர்ந்து சி.என்.என். - ஐ.பி.என். தலைமைச் செய்தி ஆசிரியர் சர்தேசாய் மற்றும் அவரது மனைவி சகரிகா கோஷ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அக்குழுமத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுகாசினி ஹைதர் இந்து நாளிதழில் பணிக்கு சேர்ந்தார்.

இந்தியா டுடே குழுமத்தில்..
இந்த நிலையில் சர்தேசாய் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தற்போது "கன்சல்டிங் எடிட்டர்" என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்- இந்தியா டுடே
இது தொடர்பாக இந்தியா டுடே குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றவர் ராஜ்தீப் சர்தேசாய். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.

புதிய அத்தியாயம்
இதேபோல் ராஜ்தீப் சர்தேசாய் தமது இணையப் பக்கத்தில், 1988ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் இருந்து வருகிறேன். கடந்த 3 மாத கால ஓய்வு வாழ்க்கையையும் ஊடகத்துறையையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்போது புதிய தெம்புடன் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்திருக்கிறேன். விரைவில் தேர்தல் தொடர்பான புத்தகம் வெளிவர இருக்கிறது. எனது பயணத்தில் இது புதிய அத்யாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications