"ஷூ" விசயத்துக்கு எங்க டச் பண்ணி எப்படி விளக்கம் கொடுத்திருக்கிறாரு பாருங்க நம்ம ஜேட்லி!
டெல்லி: ராகுல் காந்தியைப் பற்றிய அங்க அடையாளங்களைக் கூறி டெல்லி போலீஸ் விசாரித்ததை சர்ச்சையாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் மனக்கணக்கு போட்டது ஒருபுறம் இருக்க நாங்கள் வேவு பார்க்கவில்லை ஜஸ்ட் இது சாதாரண விசாரணைதான் என்று கூறி ராஜ்யசபாவில் விளக்கம் அளித்துள்ளார் அருண் ஜெட்லி.
ராகுல் காந்தியை அரசியல் உளவு பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. ராகுலின் அலுவலகத்துக்கு போலீஸார் அத்துமீறி சென்று தேவை இல்லாத விவரங்களைக் கேட்டுள்ளனர். ராகுல் காந்தி கண்களின் நிறம் என்ன, அவர் எப்படி இருப்பார், அவர் என்ன மாதிரியான ஷூ அணிவார் என்றெல்லாம் விசாரித்துள்ளனர்.
மோடியையும் பாஜக.வையும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பது குஜராத்தில் வழக்கம். குஜராத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
அதே பாணியை இப்போது தேசிய அரசியல் கட்சித் தலைவர் களிடமும் மோடி அரசு பின்பற்றுகிறது. இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கிளப்புவோம். ராகுல் பற்றி போலீஸார் விசாரித்து சென்றது குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

அருண் ஜெட்லி விளக்கம்
இதற்கு அருண் ஜெட்டி இன்று விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேவு பார்க்கப்படவில்லை. நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.க்கள்) குறித்து அவ்வப்போது தகவல் திரட்டப்படும். சுமார், 526 முக்கியப் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில்தான் ராகுல் காந்தி குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒன்றுமே இல்லாத விஷயத்தை மலையளவு பெரிதாக்குகிறது காங்கிரஸ் என்றார்.

பாதுகாப்பு காரணங்கள்
1987-ம் ஆண்டும் முதல் இவ்வாறு வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல்களை திரட்டுவதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு தகவல் திரட்டப்படுகிறது.

விவிஐபிக்கள் தகவல்கள்
வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல் திரட்டும் நடைமுறைகள் கடந்த 1999-ம் ஆண்டு திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட நடைமுறையின்படிடே முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன.

சோனியாகாந்தி தகவல்கள்
இதே நடைமுறைப்படித்தான் கடந்த 2004, 2009, 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராவதற்கு முன்னர் 2001, 2007, 2008, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் அவர் குறித்த தகவல்கள் இந்த நடைமுறையின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டன.

யாரும் விதிவிலக்கல்ல
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஸ், அகமது படேல் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல. முக்கியப் பிரமுகர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான நடைமுறை. இதில் வேவு, உளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ராஜீவ்காந்தியின் ஷூ
ராகுல் காந்தியின் ஷூ அளவு கேட்டது தொடர்பாக சர்ச்சை எழுப்பப்படுகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது ஷூ அளவு கொண்டே அவரது சடலத்தை அடையாளம் காண முடிந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், பாதுகாப்பு அமைப்புகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். அதில் நாம் தலையிடக்கூடாது" என்றும் கூறினார்.

விளக்கம் சொல்லவா தெரியாது
மோடி பேங்ல போடுறேன்னு சொன்ன 15 லட்சம் ரூபாய்கே விளக்கம் சொன்னவரு நம்ம நிதியமைச்சர். இந்த ஷூ விசயத்துக்கு எங்க டச் பண்ணி எப்படி விளக்கம் கொடுத்திருக்கிறாரு. தெரிஞ்சிக்குங்க மக்களே!
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications