For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் இருந்து அருண்ஜேட்லி போட்டி

ராஜ்யசபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அருண்ஜேட்லி போட்டியிடுகிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார்.

ராஜ்யசபாவில் 16 மாநிலங்களின் 59 எம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

Rajya Sabha Elections 2018: Jaitley to contest from UP

இத்தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி போட்டியிட உள்ளார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சரக்ள் ரூபாலா, மாண்டவியா ஆகியோர் குஜராத்தில் இருந்தும் பாஜக பொதுச்செயலர் பூபேந்திர யாதவ் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் போட்டியிட உள்ளனர். சமூக நீதித்துறை அமைச்சர் கெலாட் மத்திய பிரதேசம், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பீகாரில் இருந்தும் ஜேபி நட்டா இமாச்சலில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி.யை பாஜக தேர்ந்தெடுக்க முடியும். ராஜீவ் சந்திரசேகர், விஜய் சங்கேஸ்வர் ஆகியோர் பெயர்களை கர்நாடகா பாஜக, மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸைப் பொறுத்தவரை கன்னடர்களுக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும் என முடிவு செய்துள்ளது.

English summary
Arun Jaitley, Union Finance Minister, will contest the Rajya Sabha elections from Uttar Pradesh. Jaitley is currently a Rajya Sabha member from Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X