ஆகவே.. ‘அம்மா’விற்கு பாரத ரத்னா கொடுங்கள்.. ராஜ்ய சபா அதிமுக எம்பி பேச்சு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ராஜ்ய சபாவில் அதிமுக எம்பி கோரியுள்ளார். மேலும் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
டெல்லி: 'அம்மா'விற்கு யாரும் ஈடில்லை என்றும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் ராஜ்ய சபாவில் எம்பி விஜிலா கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கியது. நேற்று எம்பி. அகமது திடீரென மரணம் அடைந்த நிலையில், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இன்று லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் ராஜ்ய சபா வழக்கம் போல் இயங்கியது.

இன்றைய ராஜ்ய சபா கூட்டத்தில், அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், " யாரும் அம்மாவுக்கு ஈடாக முடியாது . அன்பும் கருணையும் கொண்டவர். ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக தனது கடைசி மூச்சுவரை ஓய்வின்றி உழைத்தவர். தமிழகத்தின் இரும்புப் பெண்மணி. மேலும், அனைத்து விதமான வளர்ச்சிக்கும் வழிவகுத்தவர்.
அம்மாவின் அறிவுத் திறனுக்கும் நிர்வாகத் திறனுக்கும் இணையாக உலகில் எந்தத் தலைவர்களுமே இல்லை. முன்னுதாரணமாக விளங்கும் அவரது 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கு வெண்கல சிலை நிறுவவேண்டும். நோபல் பரிசுக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும்" என்று கோரினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications